Home நாடு மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன்

மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன்

861
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

துன் மகாதிரின் முந்தைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்தினால்தான் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இன்னும் நிலையாக இருக்கிறது என்றார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகும் போது, அப்பதவியை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நம்பிக்கைக் கூட்டணி அரசாங்க உறுப்பிய கட்சிகளின் நிபந்தனையின்படி, துன் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை ஏற்றார்.