லங்காவி: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்று, இன்று (சனிக்கிழமை) லங்காவியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன என லங்காவி காவல் துறைத் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் இக்பால் இப்ராகிம் கூறினார்.
அந்த நிகழ்ச்சி குறித்து இதுவரையிலும், பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் ஐந்து புகார்களைச் செய்திருப்பதாக அவர் கூறினார்.
நஜிப், மக்களைச் சந்திக்கும் நோக்கத்தில், அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம், நிகழ்ச்சியில் எந்த ஓர் உரையும் நிகழ்த்தக்கூடாது என அறிவுறுத்திவிட்டதாகவும் முகமட் கூறினார்.
ஆயினும், காவல் துறையினர் அவ்வப்போது நிலைமையை கண்காணித்து வருவார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி கடிதம் மற்றும் இனவாதக் கூறுகள் ஏதேனும் உள்ளனவா என்று புகார் அளித்தவர்கள் காவல் துறையினரை விசாரிக்கக் கோரியுள்ளனர்.