Home நாடு சீ பீல்ட்: கோயில் செயற்குழு சார்பாக உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது!

சீ பீல்ட்: கோயில் செயற்குழு சார்பாக உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது!

863
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணையில், தங்களை சாட்சிகளாக ஏற்றுக் கொள்ள, விண்ணப்பித்த சீ பீல்ட் கோயில் செயற்குழு மற்றும் 50 இந்தியர்களின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, இன்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எம்.விஸ்வநாதன் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

கோயில் பணியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நகராததால் அடிப்பிற்கு மரணம் ஏற்பட்டதாகவும், எல்லா நிலைகளிலும் உள்ள சாட்சிகளை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

வருகிற வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அவர்களது விண்ணப்பம் செவிமடுக்கப்படும் என விஸ்வநாதன் கூறினார்.