Home நாடு மலேசியா: புற்றுநோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது!

மலேசியா: புற்றுநோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது!

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் 60 விழுக்காட்டினருக்கு, புற்றுநோய், மூன்று அல்லது நான்காவது நிலையில் இருக்கும் போது கண்டறியப்படுகிறது என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார். 

இந்த விவகாரத்தில், இந்நோயினைக் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இந்நிலை ஏற்படுவதாக அவர் கூறினார். ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே, கவனிக்காமல் நோய் குணப்படுத்த முடியாத நிலையில் மருத்துவரை நாடுவதையும் அமைச்சர் குறித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

2005-ஆம் ஆண்டு தொடங்கி 2017-ஆம் ஆண்டு வரையிலுமான கணக்கெடுப்பில், மலேசியர்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணமானது இரண்டாவது நிலையில் இருப்பதாகவும், இருதய நோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை முதலாவது இடத்தில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.