Home நாடு நாட்டின் நிலைப்பாடு, அமைதி, நல்லிணக்கம் எப்போதும் காக்கப்பட வேண்டும்!- பிரதமர்

நாட்டின் நிலைப்பாடு, அமைதி, நல்லிணக்கம் எப்போதும் காக்கப்பட வேண்டும்!- பிரதமர்

1361
0
SHARE
Ad

புத்ராஜெயா: நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கும் சீனப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் முகமட் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இம்மாதிரியான பெருநாள் காலங்களில் மலேசியர்கள் நாட்டின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் இனங்களுக்கிடையே உள்ள நல்லிணக்கத்தை பேணிக் காக்கும்படி பிரதமர் அறிவுறுத்தினார்.

பன்முகத்தன்மையான சூழலைக் கொண்ட இந்நாட்டில், மக்கள் மகிழ்ச்சியுடன் எல்லா பெருநாள்களையும் கொண்டாடி வருகிறார்கள்.  இதை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாது, நண்பர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களிடையே உறவினை வலுபடுத்திக் கொள்ள, இப்பெருநாளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.