Home இந்தியா ரஜினி-திருநாவுக்கரசர்-திருமா சந்திப்பு பரபரப்பு

ரஜினி-திருநாவுக்கரசர்-திருமா சந்திப்பு பரபரப்பு

1149
0
SHARE
Ad

சென்னை – நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு தலைவரின் உரைகளில் பொதிந்திருக்கும் மறைமுகத் தகவல்களும், சந்திப்புகளும் ஊடகங்களில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவருடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்தார். இதையடுத்து, 3 பேரும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக திருநாவுக்கரசர் இல்லத்திலேயே கலந்துரையாடினர்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, அமெரிக்காவில் ரஜினியைச் சந்தித்துப் பேசிய காரணத்தினால்தான் திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

ரஜினி, திருநாவுக்கரசர், திருமா மூவரும் தமிழக அரசியல் குறித்து சுமார் அரை மணி நேரம் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏதும் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், அண்மையச் செய்தியாக, திருநாவுக்கரசருடனான தனது சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்றும், தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கவே அவரைச் சந்தித்ததாகவும் ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.