Home நாடு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

874
0
SHARE
Ad

பாகோ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் வழிகளைக் கண்டறிந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் துணை பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், மக்களின் வாழ்க்கை செலவினங்களை சமாளிக்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றினை அரசாங்கம் அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.