Home நாடு செமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்!- மஸ்லீ

செமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்!- மஸ்லீ

863
0
SHARE
Ad

செமினி: உலு லாங்காட்டில் புதிய ஆரம்பப் பள்ளியை நிர்மாணிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

தாமான் பெலாங்கி தேசியப் பள்ளியைக் கட்டுவதற்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கை ஒன்றின் வாயிலாக இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். சுமார் 20.7 மில்லியன் ரிங்கிட் செலவில் 24 வகுப்பறைகளை அப்பள்ளி கொண்டிருக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி இப்பள்ளி கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2012-ஆம் ஆண்டிலிருந்து தாமான் பெலாங்கி குடியிருப்பு சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வருகைக்குப் பின்னர் இப்பள்ளியைக் கட்டும் பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது என மஸ்லீ கூறினார்.

வருகிற சனிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற இருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.