அமெரிக்கா: சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் சந்திப்பு வியட்னாம், ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இச்சந்திப்பு வருகிற 27 மற்றும் 28-ஆம் தேதி பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்தபடி, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளித்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கிம் ஜோங் உன் தலைமையில் வட கொரிய சிறந்த பொருளாதார சக்தியாக உருமாறும் எனவும், அவரை தாம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் மூலமாக மேலும் பல தீர்வுகளை பல்வேறு விவகாரங்களில் இவ்விரு நாடுகளும் கண்டறியும் என நம்பப்படுகிறது.