Home நாடு செமினி: சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை சரி பார்க்கலாம்!

செமினி: சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை சரி பார்க்கலாம்!

731
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சாத்தியமான வேட்பாளர்கள், வேட்புமனு பாரங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில், தங்களின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்கு முன்னதாக, தங்கள் விவரங்களை காஜாங் நகராட்சி மன்ற அலுவலகத்திலும், சிலாங்கூர் மாநில தேர்தல் அலுவலகத்திலும் சரி பார்த்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்  தலைவர் அசார் அசிசான் கூறினார்.

இவ்வாறு முன்கூட்டியே செய்வதன் மூலம், வேட்பாளர்கள் தங்கள் பாரங்களை சரியாகப் பூர்த்தி செய்வதோடு, தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளையும், தகுதிகளையும் தெரிந்துக் கொள்ள இலகுவாக இருக்கும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும்,வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளன்று எந்தப் பிரச்சனைகளும், காலதாமதமும் ஏற்படாமலிருப்பதற்கு இச்செயல்முறை உதவும் என்றார்.