புது டெல்லி: இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் மதுபானம் அருந்தியதால் உயிர் இழந்துள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இச்சம்பவம் மோசமானதாகப் பதிவிடப்பட்டுள்ளது எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மூச்சுத் திணறல் மற்றும் வயிற்று வழியின் காரணமாக இவர்கள் இறந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, நான்கு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக ஹரித்வார் காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
‘ஹூச்‘ அல்லது பட்டைச் சாராயம் எனப்படும் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்படும் மதுபானங்களினால் இந்தியாவில் இவ்வாறான மரணங்கள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது. தங்களால் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களை வாங்க இயலாததால், இவ்வாறான சாராயங்களை மக்கள் அருந்தி வருகிறார்கள்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இதே மாதிரியான சம்பவத்தில், மேற்கு வங்காளத்தில், சுமார் 172 பேர் மரணமுற்றது குறிப்பிடத்தக்கது.