Home நாடு அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை!

அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை!

791
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகப் பரப்பப்படும் தகவல்களை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாம்சுல் இஸ்காண்டார் முகமட் அலி மறுத்தார்.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தைப் பற்றி கட்சியில் எந்த ஒரு சந்திப்பும், கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என அவர் மலேசியா கினி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இவ்வாறான வதந்திகள் எங்கிருந்து, எவரால் எழுப்பப்படுகின்றன என்பதை கண்டறிவது கடினமானதாகும். சமூக ஊடகங்களில் வெளியாகும் பெரும்பாலான அரசியல் சார்ந்த செய்திகள் நம்பகமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. மேலும், அவை கட்சித் தலைவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாகவும் இருப்பதில்லை என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், பெரும்பாலான மக்கள் அஸ்மின் அலிக்கும், ராபிசி ராம்லிக்கும் இடையிலான உட்கட்சிப் பிரச்சனைகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.