Home நாடு செமினி: கேமரன் மலையின் வேகமும், விவேகமும் தொடரப்படும்!

செமினி: கேமரன் மலையின் வேகமும், விவேகமும் தொடரப்படும்!

991
0
SHARE
Ad

செமினி: கேமரன் மலை இடைத் தேர்தலின் போது இருந்த வேகமும் விவேகமும், இம்முறை செமினி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

இவ்விரண்டு பகுதிகளுக்கு இடையிலான வாக்காளர்களின் எண்ணிக்கையானது வெவ்வேறாக இருந்தாலும், தங்களால் செமினியில் சிறப்பாக இயங்க முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய சப்ரி, செமினியில் மொத்தம் மூன்று வகையான வாக்காளர்கள் உள்ளதாக குறிப்பிட்டார். கிராமப்புற வாக்காளர்கள், புறநகர் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் என அவர்களை குறிப்பிட்டார். கிராமப்புற வாக்காளர்கள் இன்னும் தேசிய முன்னணி பக்கம் இருப்பதாகவும், இதர வாக்காளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.