Home இந்தியா தமிழ் நாடு: சிகிச்சை முடிந்து கேப்டன் சென்னை திரும்புகிறார்!

தமிழ் நாடு: சிகிச்சை முடிந்து கேப்டன் சென்னை திரும்புகிறார்!

899
0
SHARE
Ad

சென்னை: உடல் நலப் பிரச்சனையால், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னைக்கு திரும்ப இருப்பதாக, தேமுதிக தகவல் வெளியிட்டுள்ளது.

அரசியலில் தனக்கென்ற ஓர் இடத்தினை வகுத்து, தேர்தல் காலங்களில் இதரக் கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டும், ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாமல் தனது முதல் வீழ்ச்சியை தேமுதிக சந்தித்தது. கட்சித் தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் மேலும் குன்றிப் போக, கட்சியே எதிர்காலமின்றி போகும் நிலை உண்டானது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கேப்டன் சென்னை திரும்பியதும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.