கடந்த மாதம் 30-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 1-ஆம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்பட்ட, அந்த ஆய்வில் சுமார் 1,142 பேர் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக இயங்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதை, இந்த ஆய்வினை ஏற்று நடத்திய இன்ஸ்டிடுட் டாயுல் ஏசான் (Institut Darul Ehsan) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் ரிட்சுவான் தெரிவித்தார்.
தேசிய முன்னணி சுமார் 37 விழுக்காட்டில் அடுத்த நிலையில் இடம்பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டுக் கூறினார். 9 விழுக்காட்டு வித்தியாசத்தில் மிக அருகில் இருப்பது, எம்மாதிரியான சூழலையும் ஏற்படுத்தி விடும் என அவர் எச்சரித்தார்.