Home நாடு செமினி: தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!

செமினி: தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!

1036
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிருவாக அதிகாரி,  சாகாரியா ஹானாபி போட்டியிட இருக்கிறார்.

தேசிய முன்னணியின் வேட்பாளரை அறிமுகம் செய்த அம்னோ இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் கூறுகையில், மக்கள் இதுகாறும் நம்பிக்கைக் கூட்டணி நடத்தி வந்த ஆட்சி முறையையும், அவர்களால் பல்வேறு விவகாரங்களில் ஏமாற்றப்பட்டதையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, உலு லாங்காட் பெர்சாத்து கட்சியின் பொருளாளரான முகமட் அய்மான சாய்னாலி நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக, உள்துறை அமைச்சர் மொகிதின் யாசினால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

#TamilSchoolmychoice

நேற்றிரவு (புதன்கிழமை) பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதி செயற்குழு உறுப்பினர் நிக் அசிஸ் அபிக் அப்துல் என்ற 25 வயது இளைஞர் அந்தக் கட்சியின் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.