Home வணிகம்/தொழில் நுட்பம் போலியான செய்திகள், வதந்திகள் பரப்பும் கணக்குகள் முடக்கப்படும்!

போலியான செய்திகள், வதந்திகள் பரப்பும் கணக்குகள் முடக்கப்படும்!

994
0
SHARE
Ad

புது டெல்லி: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய அரசு ஒரு சில முக்கிய சமூக ஊடகங்களுக்கு, அதில் இடம்பெறும், போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை பரவ விடாமல் தடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்மாதிரியான போலியானச் செய்திகள் மற்றும் தகவல்களைப் பரப்பும் சுமார் 20 இலட்சம் கணக்குகளைத் தடை செய்து வருவதாக வாட்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வெறும் 5 பேருக்கு மட்டுமே செய்தியை அல்லது தகவலை அனுப்ப முடியும் என்ற கட்டுபாட்டை அந்நிறுவனம் இந்தியாவில் விதித்திருந்தது. பின்பு, அதுவே உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

மேலும், சந்தேகத்திற்குரிய கணக்குகளை புகார் செய்யும் போது, பல மோசடி கணக்குகளை நீக்கமுடியும் என வாட்சாப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  தற்போது நீக்கப்பட்டுவரும் கணக்குகளில் 95 விழுக்காட்டு கணக்குகள், இயல்பற்ற செயல்களைக் கொண்டிருப்பவை என அது தெரிவித்தது. எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத  கணக்குகளும் நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.