Home நாடு அபுடாபியில் 5 தங்கங்களை வென்ற சிறுமி அபிராமி!

அபுடாபியில் 5 தங்கங்களை வென்ற சிறுமி அபிராமி!

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அபுடாபியில் நடைபெற்று முடிந்த பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குப் பெற்ற ஶ்ரீ அபிராமி ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். உலகின் முன்னிலை விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், 7 வயதிலிருந்து 8 வயதுக்கு உட்பட்ட ஐந்து பிரிவுகளில் களம் இறங்கிய அபிராமி,  சிறப்பான விளையாட்டை வெளிக்கொணர்ந்து வெற்றி வாகையை சூடியுள்ளார்.

பனிச்சறுக்குப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவது அபிராமிக்கு புதிதான ஒன்றாக இல்லை என்றாலும், இந்த இளம் வயதில் அவர் முனைப்போடு இருந்து நாட்டின் பெருமையை உலகளவில் நிலைநாட்டி உள்ளதை மலேசியர்கள் அனைவரும் பெருமைக் கொள்ள வேண்டும்.

தாம் வெற்றிப் பெறுவதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்த அபிராமி, 2016-ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குப் பெற்று வெற்றிப் பெற பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.