Home நாடு பொருளாதாரம், மேம்பாடு மட்டும் நாட்டின் வளர்ச்சி அல்ல- வான் அசிசா

பொருளாதாரம், மேம்பாடு மட்டும் நாட்டின் வளர்ச்சி அல்ல- வான் அசிசா

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கு, பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மட்டும் முக்கியக் காரணிகளாக அமைவதில்லை என துணை பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். இந்நாட்டில் வாழும் மக்களின் ஒற்றுமைமிக முக்கியமானக் கூறாக அமைகிறது என அவர் தெரிவித்தார்.

மலேசியர்கள் இன ஒற்றுமையை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டும் என சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் கேட்டுக் கொண்டார்.

இம்மாதிரியான கொண்டாட்டங்களின் போது, மக்கள் ஒற்றுமையாக இருந்து, இப்பெருநாள்களைக் கொண்டாடும் போது, மலேசியர்கள் மத்தியில் நெருங்கிய உறவை நிலைநாட்ட முடியும் என்று வான் அசிசா கூறினார்.