Home நாடு மலேசியாவிற்கு பெருமை சேர்த்த அபிராமிக்கு வேதமூர்த்தி பாராட்டு

மலேசியாவிற்கு பெருமை சேர்த்த அபிராமிக்கு வேதமூர்த்தி பாராட்டு

1388
0
SHARE
Ad

புத்ராஜெயா: ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டுத் துறை மூலம் மலேசியத் திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சின்னஞ்சிறு வீராங்கனை ஸ்ரீ அபிராமி பி.சந்திரனுக்கு (படம்) பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

சீனா, ஷென்சென் நகரில் நடைபெற்ற ஐஎஸ்ஐ ஆசிய ஸ்கேட்டிங் வெற்றியாளர் போட்டியில் மலேசியாவைப் பிரதிநித்து விளையாடிய அபிராபி நான்கு தங்கப் பதக்கங்களைக் குவித்து நாட்டின் புகழை நிலைநாட்டி இருப்பது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது.

தந்தை சந்திரனுடன் அபிராமி

ஆறே வயதான அபிராபியின் இலக்கும் மன உறுதியும் வியப்பளிக்கிறது. விளையாட்டுத் துறையில் அதீத ஆற்றலுடன் விளங்கும் தன் மகள் இந்த சாதனையை எட்டுவதற்காக 40 ஆயிர வெள்ளிக்கு மேல் சொந்தப் பணத்தை செலவு செய்துள்ள பி.சந்திரனின் நாட்டுப் பற்றுக்கு மனப்பூர்வமான பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அபிராமியின் தந்தை சந்திரனின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் 2016 குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்வழி அபிராமி மேலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கும் விளையாட்டுத் துறைக்கும் பெருமை சேர்ப்பதற்கு ஏதுவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி  குறிப்பிட்டுள்ளார்.