Home நாடு சாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்!

சாஹிட் தலைவர் பதவியை கைவிட வேண்டும்!

1109
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அம்னோ கட்சியின் தற்போதையத் தலைவர், டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹாமீடியை, கட்சியின் நலன் கருதி, பதவி விலகுமாறு சபா மாநில அம்னோ இளைஞர் பகுதித் துணைத் தலைவர் காசாலீ அன்சிங் கேட்டுக் கொண்டார்.

நேற்று அம்னோவிலிருந்து கட்சி உறுப்பினர்கள் அதிகமான அளவில் வெளியானதை முன்னிட்டு அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

அப்படி சாஹிட் தானாக முன்வந்து பதவி விலகவில்லை என்றால், கட்சியின் உச்சமட்டக் குழு இவ்விசயத்தைக் கருத்தில் கொண்டு, அவரை அப்பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நெருக்குதல்களைத் தரவேண்டும் என்றும் காசாலீ அன்சிங் குறிப்பிட்டார்.