கோலாலம்பூர்: சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி வெற்றி குறித்த விவகாரத்தில், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த தேர்தல் ஆணையம் மற்றும் அம்னோ துணைத் தலைவரின் விண்ணப்பத்தை, கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கு முன்னதாக, கடந்த 14-வது பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முகமட் ஹசானின் வெற்றியை சிறப்பு தேர்தல் நீதிமன்றம் இரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீதிபதி ரிச்சர்ட் மலான்ஜும், தேர்தல் ஆணையம் மற்றும் முகமட் ஹசான் ஆகியோரை 10,000 ரிங்கிட் பணத்தைச் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
2018-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி , சிரம்பான் சிறப்பு தேர்தல் நீதிமன்றம், டாக்டர் ஶ்ரீராமின் மனுவை ஏற்று, 14-வது பொதுத் தேர்தலில் முகமட் ஹசானின் வெற்றியை இரத்து செய்தது. அத்தொகுதியில் முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரந்தாவ் சட்டமன்றத்தில் முகமட் ஹசானின் வெற்றி செல்லாது எனவும், வேட்பாளரோ அல்லது ஆதரவாளர்களோ, அடையாளம் ஒட்டு அணிந்து வேட்புமனுவை சமர்பிக்க வேண்டும் எனவும் சட்டம் ஏதும் இல்லை என அது அறிவித்திருந்தது.