அமெரிக்கா: இந்த ஆண்டின் மிகப்பெரிய பெருநிலவு நிகழ்வு நாளை திங்கட்கிழமை (பிப்ரவரி 19) நிகழ உள்ளது.
சாதாரண நாட்களை விட இந்த பெருநிலவு நிகழ்வின் போது நிலவு மிகவும் பெரிதாகவும், அருகில் இருப்பது போல் தோன்றும். இதனை நேரடியாக நாம் காண முடியும்.
இந்த நிகழ்வு அமெரிக்கா, இந்தியா, மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாக, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் மிக சிறப்பாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்த பெருநிலவு நிகழ்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் மிகவும் பிரபலமனாது. இதற்கு அடுத்து, ஏழு ஆண்டுகள் கழித்து, அதாவது 2026-இல் மீண்டும் பெருநிலவு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.