Home நாடு பெர்சாத்து கட்சி சபாவிற்கு வருவதை தடுக்க இயலாது! ஷாபி அப்டால்

பெர்சாத்து கட்சி சபாவிற்கு வருவதை தடுக்க இயலாது! ஷாபி அப்டால்

1566
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: பெர்சாத்து கட்சி சபா மாநிலத்தில் நிறுவப்படுவது குறித்து, சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ முகம்ட ஷாபி அப்டால் நாளை செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பெர்சாத்து கட்சி சபாவிலும் நிறுவப்படும் என அறிவித்திருந்தார்.

அதே சமயம் முன்னாள் சபா மாநில அம்னோ தொடர்புக்குழு தலைவர் டத்தோ ஹஜிஜி நூர், அம்னோவிலிருந்து வெளியான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் விரைவில் பெர்சாத்து கட்சியில் இணைவார்கள் என தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்டு கியாண்டி கூறுகையில், 100,000 முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் இணைவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்து கருத்துரைத்த ஷாபி, பெர்சாத்து கட்சி சபாவில் நிறுவப்படுவதை தம்மால் நிறுத்த இயலாது எனக் கூறினார்.