Home நாடு செமினி: நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!

செமினி: நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது!

847
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் நிலை சற்று ஆட்டம் கண்டிருப்பதாக, அக்கூட்டணியின் வேட்பாளர் முகமட் அய்மான் சாய்னாலி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வருகை, செமினி மக்களின் பார்வையை அவர் மீது திரும்பச் செய்திருப்பதை அய்மான் குறிப்பிட்டிக் கூறினார்.   

எனினும், செமினி மக்களின் வலுவான ஆதரவு பெற்று தாம் இந்த இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்றிரவு, சுமார் 1,000 பைடூரி அடுக்குமாடி வீட்டு குடியிருப்பாளர்கள் முன்னாள் பிரதமரின் உரையைக் கேட்பதற்காக ஒன்றுக் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெறும், 100 மீட்டர் தூரத்தில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி நிகழ்ச்சியில் நூறு பேர் கூட இல்லை என்பதை சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

#TamilSchoolmychoice

தாம் இளம் வயதாக இருந்தாலும், மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என அய்மான் உறுதிபடக் கூறினார்.