Home நாடு செமினி: பங்களிப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!- அமிருடின்

செமினி: பங்களிப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!- அமிருடின்

1049
0
SHARE
Ad

ஷா அலாம்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் முடியும் வரையிலும், மாநில அரசு சார்ந்த பங்களிப்பு நிகழ்ச்சிகளை சிலாங்கூர் மாநில அரசு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் தவறான எண்ணங்கள் எழாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பொதுவாக, தேர்தல் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் பங்களிப்புகள் வழங்கப்படுவது வாக்குகளை வாங்குவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

ஆயினும், அரசு முன்னதாகவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, திட்டமிட்டதை மட்டும்தான் தாங்கள் நிறைவேற்றி வருவதாக அவர் விளக்கினார்.