Home இந்தியா அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள்

அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள்

787
0
SHARE
Ad

சென்னை – விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பல மாதங்களாக ஆரூடம் கூறப்பட்டு வந்த அதிமுக-பாஜக கூட்டணி நேற்று செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினம் என்பதாலும், மாசிமகம் கொண்டாடப்படும் நாள் என்ற காரணத்தாலும், விறுவிறுவென்று கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மாலை 4.30 மணிக்குப் பின்னர் அதாவது பஞ்சாங்க முறைப்படி இராகு காலத்திற்குப் பின்னர் இந்தக் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாஜகவுக்கான தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நடத்திய இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பாஜகவுக்கு 5 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்குப் பின்னர் அவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த் வீட்டிற்கே  சென்று சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் விஜய்காந்தை நலம் விசாரித்தார்.

#TamilSchoolmychoice

எனினும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக)   7 நாடாளுமன்றத் தொகுதிகளும், 1 ராஜ்ய சபா எனப்படும் நாடாளுமன்ற மேலவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.