கோலாலம்பூர்: நீதிதுறையில் ஏற்படும் சீர்கேடுகளை விசாரிக்க அரசாங்கம், அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ) ஒன்றினை அமைக்கும் பரிந்துரைக்கு நேற்று (வியாழக்கிழமை) ஒப்புக் கொண்டததை பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
மேல்முறையீட்டு நீதிபதி டத்தோ டாக்டர் ஹமிட் சுல்தான் கூறிய குற்றச்சாட்டுகளை புலன்விசாரணை செய்ய இந்த ஆர்.சி.ஐ அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட உயர்மட்ட நீதிபதிகளின் மத்தியில் முறைகேடுகள் நடப்பதாக ஹமிட் சுல்தான் இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கான, ஆவண அறிக்கை உறுதிமொழி ஒன்றினை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்துரைத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், ஆர்.சி.ஐ. தனது விசாரணைகளை வழிநடத்தும் போது, அனைத்து நீதிமன்ற வழக்குகளும் வழக்கம்போல் நடைபெறும் எனவும், எவ்வித காரணமும் இன்றி எந்தவொரு வழக்குகளும் ஒத்திவைக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.