Home நாடு “பாஸ் கட்சி கள்ளத்தனம் மிக்கது!”- மொகிதின்

“பாஸ் கட்சி கள்ளத்தனம் மிக்கது!”- மொகிதின்

875
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாஸ் கட்சி, கள்ளத்தனம் மிக்கது என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அக்கட்சயின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹடி அவாங் பிரதமர் மகாதீரை சந்தித்து, பாஸ் கட்சி இனி, அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு ஆதரவு தரப்போவதில்லை எனக் கூறியதை சுட்டுக் காட்டிப் பேசினார்.

ஆயினும், உள்துறை அமைச்சருமான மொகிதின், நம்பிக்கைக் கூட்டணி இந்த விவகாரத்தில் தங்களின் கவனத்தைச் செலுத்தப்போவதில்லை எனவும், தற்போதுள்ள மக்களின் ஆதரவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.