Home இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய ஆற்று நீரை இந்தியா தடுத்தது!

பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய ஆற்று நீரை இந்தியா தடுத்தது!

1090
0
SHARE
Ad

புது டில்லி: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்திய உறவில் விரசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியா பல்வேறு தடைகளை அந்நாட்டின் மீது விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வியாழக்கிழமைப் பதிவிட்டிருந்தார்.

ஆயினும், இது இந்திய அரசின் நீண்டகாலத் திட்டமாக அமையும் எனவும், இதனால் பாகிஸ்தானுக்கு உடனடியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். இதன் மூலமாக, இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்முகாஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இரவி ஆற்றில் ஷாக்பூர்கான்ட் அணை கட்டுமானம் தொடங்கிவிட்டதாகவும், யு.ஜே.ஹெச் பணித்திட்டம் இந்தியாவின் பங்கு நீரை சேமித்து வைத்து ஜம்முகாஷ்மீரின் தேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.