Home நாடு நஸ்ரி மீது விசாரணை நடத்தப்படுகிறது!- புசி ஹருண்

நஸ்ரி மீது விசாரணை நடத்தப்படுகிறது!- புசி ஹருண்

827
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனவாதத்தை தூண்டும் அளவிற்கு உரையாற்றிய, தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் கூறினார்.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான, நஸ்ரி மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும், 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும்.

நஸ்ரிக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக புசி தெரிவித்தார். இதனிடையே, இது குறித்துப் பேசிய நஸ்ரி, செய்தித் தளங்கள் அவருக்கு எதிராக செய்திகளை வெளியிட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.