Home நாடு செமினி: மதியம் வரையிலும் 56 விழுக்காடு வாக்குப் பதிவு நடந்துள்ளது!

செமினி: மதியம் வரையிலும் 56 விழுக்காடு வாக்குப் பதிவு நடந்துள்ளது!

765
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே வாக்களிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், மதியம் வரையிலும் 56 விழுக்காடு வாக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, தேர்தலின் போது வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார். வெறும், செய்தித் தளங்களில் வரும் பதிவுகளை வைத்து தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்க முடியாதென தெரிவித்த அவர், ஆதாரப்பூர்வமான சாட்சிகள் தேவைப்படும் என்பதை நினைவுப்படுத்தினார்.

858 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 761 பேர் செமினி பொதுப் படைப் பிரிவு பட்டாலியன் 4-இல் அமைந்திருக்கும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்மேலும், 97 பேர் காஜாங் மாவட்ட காவல் தலைமையகத்தில் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நான்கு வேட்பாளர்களும், தங்களின் வாக்குகளைப் பதிந்தனர்.