இவ்வாறான திட்டங்களினால், அரசு சார்ந்த விவகாரங்களில் மக்கள் உடனடியாக பயனடைவார்கள் என அத்துறை தெளிவுப்படுத்தியது.
சமீபத்தில், அதன் மின்னியல் அரசாங்கக் (eGovernance) கொள்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, காகிதமற்ற அலுவலகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தை அறிவித்தது.
அலுவலக பணிகளின் செயல்திறனை அதிகரிக்க, மாநில அலுவலகங்களில் மின்–அலுவலகம் (e-Office) அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் என அது குறிப்பிட்டிருந்தது. அரசாங்க கோப்புகள், ஆவணங்கள் மற்றும் பதிவுகள் மின்னியல் படிவத்தில் கிடைப்பதை உறுதி செய்ய, அவை படிகள் எடுக்கப்பட்டு எளிதில் அணுகக்கூடிய அமைப்பாக வடிவமைக்கப்படும் என அத்துறை கூறியுள்ளது.