Home உலகம் டிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு!

டிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு!

1126
0
SHARE
Ad

வியட்னாம்:  நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28), வியட்னாமில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அணு ஆயுத மாநாடும் நடைபெற உள்ளது.  இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை வியட்னாம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு செய்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. குறிப்பாக, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.