Home நாடு பி40 குடும்பங்களுக்கான மைசலாம் காப்புறுதித் திட்டம் தொடங்கப்பட்டது!

பி40 குடும்பங்களுக்கான மைசலாம் காப்புறுதித் திட்டம் தொடங்கப்பட்டது!

710
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக (பி40) அறிமுகப்படுத்தப்பட்ட, தேசிய சுகாதார காப்புறுதி திட்டமான, மைசலாமிற்கு (mySalam) இணையம் வழி பதிவுச் செய்யும் வழிமுறையை அரசாங்கம் சுலபமாக்கித் தரும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் உத்தரவாதம் அளித்தார்.

www.mysalam.com.my என்ற இணையத்தளம், இன்று செவ்வாய்கிழமை முதல் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதலே காப்புறுதி செயல்படத் தொடங்கி விட்டதாகவும், மார்ச் 1-ஆம் தேதி இதற்கான பதிவு மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் விளக்கினார்.

#TamilSchoolmychoice

மொத்தமாக 36  நோய்களுக்கான காப்புறுதி சேவையை இந்த திட்டம் வழங்குகிறது. கிரேட் இஸ்டேர்ன்  காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் இந்த முன்முயற்சியில் இறங்கியுள்ளதாக லிம் தெரிவித்தார்.