Home நாடு “இந்திரா காந்தி கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை!”- புசி ஹருண்

“இந்திரா காந்தி கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை!”- புசி ஹருண்

945
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் இளைய மகளான பிரசன்னா டிக்ஸா மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா குறித்த எந்தவொரு புதிய தகவலும் இல்லை என காவல் துறைத் தலைவர் புசி ஹருண் தெரிவித்தார்.

ஆயினும், இந்த விவகாரத்தில் மக்களின் உதவியை பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை, இந்திரா காந்தி அதிரடி அணி (இங்காட்எனும் அமைப்புஅதிர்ச்சியூட்டும் சில தகவல்களை வெளியிட்டது, அதாவது பிரசன்னா டிக்ஸாவின் அடையாள அட்டை எண் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து அந்த அமைப்பு மலேசிய பதிவுத் துறையை நாடியுள்ளதாகவும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மேலும், பிரசன்னா டிக்ஸா மற்றும் முகமட் ரிட்சுவானை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 10,000 ரிங்கிட் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்திருந்தது.