Home கலை உலகம் பாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு

பாகிஸ்தான் மீதான தாக்குதல்: தமிழ்த் திரையுலகம் வரவேற்பு

898
0
SHARE
Ad
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய மிராஜ் ரக இந்திய விமானப் படை போர் விமானங்கள்

சென்னை – பாகிஸ்தான் பகுதியிலுள்ள பயங்கரவாதக் கும்பல்களின் தளங்களை நோக்கி இந்திய வான்படை நடத்திய துல்லியமானத் தாக்குதல்களுக்காக இந்தியாவிலும், உலக நாடுகள் மத்தியிலும் பலத்த ஆதரவு கிடைத்து வரும் வேளையில், தமிழ்த் திரையுலகினரும் தங்களின் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவின் வீரத்துக்கு வாழ்த்துகள்” என்ற பொருளில் Bravo India என தனது டுவிட்டர் பக்கத்தில் சுருக்கமாகப் பதிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்திய 12 விமானிகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தியா இந்த வீரர்களுக்காக பெருமை கொள்கிறது என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இவர்களைத் தவிர, நடிகர் சரத்குமார், நடிகை கௌதமி, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், என தமிழ் சினிமாவின் பலதரப்பட்ட பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்களின் வரவேற்பையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.