செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்கூட்டிய வாக்களிப்புகளில் மாலை 5.00 மணி வரையில் 78.8 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
மொத்தமுள்ள 858 வாக்காளர்களில் இதுவரையில் 676 பேர் வாக்களித்துள்ளனர். செமினி இடைத் தேர்தலில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் இந்த அதிக விழுக்காட்டு வாக்களிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.
இரண்டு மையங்களில் நடைபெற்ற வாக்களிப்புகளில் காஜாங் காவல்துறையில் மட்டும் 94.85 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. ஐந்து வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வரவில்லை.
செமினி சட்டமன்றத்துக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறும்.