Home இந்தியா இந்தியா- பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலில் உறுதியான தகவல்கள் இல்லை!

இந்தியா- பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலில் உறுதியான தகவல்கள் இல்லை!

619
0
SHARE
Ad
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய மிராஜ் ரக இந்திய விமானப் படை போர் விமானங்கள்

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 3:30 மணியளவில் (இந்திய நேரம்) பன்னிரெண்டு மிராஜ் 2000 இந்திய போர் விமானங்கள், இந்தியாபாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதலை நடத்தியதாக எ.என்.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

சுமார் 1000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்பார்க்காத நிலையில் இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இதற்கிடையே, இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய வான்படை தெரிவித்ததாக, நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது. இதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதல் நடந்ததை உறுதி செய்தது, ஆயினும், இத்தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் உள்ளது என பாகிஸ்தான் அறிவித்தது.