Home நாடு “இனவாதமாகப் பேசியது நஸ்ரியின் தனிப்பட்ட கருத்து!”- முகமட் ஹசான்

“இனவாதமாகப் பேசியது நஸ்ரியின் தனிப்பட்ட கருத்து!”- முகமட் ஹசான்

742
0
SHARE
Ad

செமினி: தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அஜிஸ்சின், தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை மூடுவது குறித்த கருத்து, அம்னோவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹாசன் குறிப்பிட்டார். அவை அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும் என அவர் மேலும் விவரித்தார்.

அம்னோ கட்சி, மலேசியாவில் உள்ள தாய் மொழி வழிப் பயிலும் பள்ளிகளை மதித்தும், அதன் தேவைகளை ஆழ்ந்து மதிப்பிட்டும் வந்துள்ளது. மேலும், இப்பள்ளிகள் மலேசியாவில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டியவை” என அவர் கூறினார்.

தேசிய முன்னணிக் கூட்டணி கட்சிகளுக்குள் பல்லின மக்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் கொண்டாடுவதும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் அக்காலம் தொட்டே தொடரப்பட்டு வந்த வழக்கு என அவர் குறிப்பிட்டார். இந்த ஒற்றுமையே தேசிய முன்னணியின் வலிமையாக இருந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.