Home நாடு செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!

செமினி: தே.மு, நம்பிக்கைக் கூட்டணி பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டம்!

708
0
SHARE
Ad

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற இருக்கும் வேளையில், நாளை (வியாழக்கிழமை) நம்பிக்கைக் கூட்டணியும் , தேசிய முன்னணியும் பெரிய அளவிலான பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

நம்பிக்கைக் கூட்டணி பிரச்சாரத்தில் பிரதமர் மகாதீர் இரவு 9:00 மணியளவில் உரை நிகழ்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தேசிய முன்னணி இரவு 7:00 மணிக்கு தங்களது பிரச்சார மேடையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அம்னோ இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் பாஸ் கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவார்கள எனக் கூறப்படுகிறது.

இடைத் தேர்தல்களில் பிரதமரின் பங்கு பெரிதாக இருக்காத போது, இந்த இடைத் தேர்தலில் பிரதமர் மகாதீர் களம் இறங்குவது, நம்பிக்கைக் கூட்டணி அரசு, மக்களிடையே நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நேற்று (செவ்வாய்க்கிழமை), நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் 78 விழுக்காடு வாக்குகள் பதிவுச் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.