Home நாடு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!

880
0
SHARE
Ad

புத்ராஜெயா: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் பதற்றங்களின் காரணமாக பாகிஸ்தானிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி, இந்த நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், நோடாம் (NOTAM) எனப்படும் எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

2014-ஆம் ஆண்டில், உக்ரைன் வான்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, மலேசியா ஏர்லைன்ஸ் (MH17) சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவுக்கூர்ந்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக், அவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமலிருப்பதற்காக இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயணிகள் மற்றும் அனைத்து விமானங்களையும் அந்நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்தது.