Home நாடு பாஸ்- அம்னோ கூட்டணி தோற்றுவிக்கப்படுமா? மார்ச் 5-இல் முடிவு!

பாஸ்- அம்னோ கூட்டணி தோற்றுவிக்கப்படுமா? மார்ச் 5-இல் முடிவு!

717
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

செமினி: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் இணைப்பு குறித்த கூட்டம் மார்ச் 5-ஆம் தேதி கலந்தாலோசிக்கப்படும் என இடைக்கால அம்னோ கட்சித் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார். இந்த சந்திப்பின் வழி அக்கட்சிகளின் வழிநடத்தலும், வழிகாட்டலும் மாற்றியமைக்கப்படலாம் எனும் சமிக்ஞையை அவர் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

அக்கூட்டத்தில் இடைக்கால அம்னோ தலைவரான முகமட் ஹசான் மற்றும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இருவரும் தலைமை தாங்குவர் எனக் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்தப்படியாக, நாங்கள் மாநிலங்களுக்குச் செல்வோம்என அவர் தமது உரையில் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் கூட்டு ஒத்துழைப்பும், வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும், குறிப்பாக ஜசெக கட்சிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இது விளங்கும்”  என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பாஸ் மட்டும் அம்னோ கட்சிகள் தற்போது இணைந்து இடைத் தேர்தல்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, இந்த ஒத்துழைப்பு கூட்டணியாக நிறுவப்பட்டால், முஸ்லிம் அல்லாத மசீச மற்றும் மஇகா கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.