Home நாடு “தே.முவுக்கு வாக்களித்து, வாக்குகளை வீணாக்காதீர்!”- மகாதீர்

“தே.முவுக்கு வாக்களித்து, வாக்குகளை வீணாக்காதீர்!”- மகாதீர்

704
0
SHARE
Ad

செமினி: தேசிய முன்னணிக்கு வாக்களித்து உங்களின் வாக்குகளை வீணாக்காதீர்கள் என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று (வியாழக்கிழமை) செமினியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார். மக்கள் தெளிவாக தங்களின் வாக்குகளைப் பதிய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி வெற்றிப் பெற்றாலும், அவர்களால் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என அவர் தெரிவித்தார். மத்தியத்திலும், மாநில அளவிலும் நம்பிக்கைக் கூட்டணியே ஆட்சியில் உள்ளது, ஆகவே, அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என பிரதமர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான முகமட் அய்மானுக்கு அனைத்து விதத்திலும் , மத்திய அரசும், மாநில அரசும் ஆதரவாக இருப்பதோடு, மக்களுக்காக அவர் கொண்டு வர நினைக்கும் அனைத்து மாறுதல்களையும் நிறைவேற்றும் சக்தியும் அவருக்கு இருக்கும் என பிரதமர் அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் எடுத்துரைத்தார்.