பிரசன்னாவின் பதிவுகள் கல்வி அமைச்சின் தரவுத்தளத்தில் காணப்படாததால் அவர்கள் இவ்வாறான முடிவுக்கு வந்தனர்.
மேலும், இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா பற்றிய தகவலை வழங்குவோருக்கு 10,000 ரிங்கிட் அன்பளிப்பு வழங்கப்படும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்திருந்தது.
இது சம்பந்தமாக, தேசிய பதிவு இலாகாவிடம் இங்காட் அமைப்பு மன்னிப்புகேட்க வேண்டும் என அது தெரிவித்தது. அப்படி இல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.