Home நாடு செமினி: காலை 10.00 மணிவரை 28 விழுக்காடு வாக்களிப்பு!

செமினி: காலை 10.00 மணிவரை 28 விழுக்காடு வாக்களிப்பு!

668
0
SHARE
Ad

செமினி: இன்று சனிக்கிழமை, நடைபெறும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிப்பு காலை 8.00 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 24 வாக்குப் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

காலை 10.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 28 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

4 முனைப் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் செமினியில் நேற்று  நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவடைந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு இன்றிரவு 10.00 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.