Home நாடு தேமுவின் எதிர்காலம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு!

தேமுவின் எதிர்காலம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு!

950
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி அங்கத்துவ கட்சியான மசீச, அக்கூட்டணியைக் கலைத்து விடலாம் என முன்மொழிந்ததை அடுத்து, அம்னோ உச்சமன்றக் குழு, இன்று வியாழக்கிழமை அக்கூட்டணியின் எதிர்காலத்தை விவாதிக்க உள்ளதாக, அம்னோ உயர்மட்டக் குழு உறுப்பினர் அர்மாண்ட் அசா அபு ஹனிபா தெரிவித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு முன்பதாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக, அம்னோ கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேசிய முன்னணி தலைமைச் செயலாளரான, நஸ்ரி அஜிஸின் இனவாத உணர்வு அடிப்படையிலான கருத்துகளைக் குறித்து, அம்னோ கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அமைதிக் காத்து வந்தது, மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அக்கூட்டணியை விட்டு விலக முடிவு எடுத்திருப்பதாக அவை கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்திருந்தன.