Home இந்தியா ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!

ஜம்மு: பேருந்துக்குள் குண்டுவெடிப்பு, 18 பேர் படுகாயம்!

762
0
SHARE
Ad

ஜம்மு காஷ்மீர்:  இன்று வியாழக்கிழமை நண்பகல் ஜம்மு பேருந்து நிலையத்தில், பேருந்தில் குண்டு வெடித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் 18 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக காவல் துறையினர் விரைந்து வந்து, தீவிர சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்தியாபாகிஸ்தான் எல்லையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலால் இரு நாடுகளுக்கிடையே சுமுகமான சூழல் ஏற்படாத நிலையில், மீண்டும் இம்மாதிரியான சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் பதற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது