Home நாடு எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் தொடரும்!

எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் தொடரும்!

1178
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் (எம்எச்370) கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்படாது என போக்குவரத்து அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.

புதிய நம்பகமான ஆதாரங்கள் இருந்தால், காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகளை தொடர்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அது குறிப்பிடிருந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் இன்னும் அந்த சம்பவத்தின் சோகத்திலிருந்து மீளாது இருப்பது குறித்து அமைச்சு வருத்தம் தெரிவித்துக் கொண்டது. ஆயினும், அவர்களுக்காக அமைச்சும் பிரார்த்தனை செய்துக் கொள்வதாக தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு செல்லும் வழியில், 239 பேருடன், ரேடார் திரையிலிருந்து எம்எச்370 மர்மமான முறையில் மறைந்து போனது.

இதற்கிடையே, ஆஸ்திரிலியா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், பிரதமர் மகாதீர் முகமட் அவ்விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடரப்படும் எனக் குறிப்பிடிருந்தார்.