Home இந்தியா “தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா

“தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவில்லை எனில், பாகிஸ்தான் ஒதுக்கப்படும்!”- அமெரிக்கா

1116
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் துணைக்குழுவின் தலைவருமான அமி பெரா, பாகிஸ்தானில் இயங்கிக் கொண்டிருக்கும் தீரிவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அதற்கு பக்கபலமாக அமெரிக்க இருக்கும் என தெரிவித்தார். ஆயினும்,  அதற்கு மாறான செயல்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் அது விபரீதமாக முடியும் என அவர் எச்சரித்தார்.

இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தது சரியான செயல் என்றும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில்  ஜய்ஷ்-இ- முகமட் அமைப்பின் மீது, ஐநா விதித்திருக்கும் தடையை அகற்றக் கோரும், சீன அரசு பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தில் துணையாக இருந்து செயல்பட வேண்டும் எனக் கூறினார்.

மார்ச் 5-ஆம் தேதி இரண்டு தீவிரவாதக் குழுவுடன் சேர்த்து, பல பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் இதுவரையிலும் தடை செய்துள்ளது. ஆயினும், அதே நேரத்தில் அதன் சொந்த எல்லைக்குள் இன்னும் ஒரு சில தீவிரவாத செயலில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதை அவர்கள் காத்து வருகிறார்கள். இதுவே, அனைத்துலக சமூகம் பாகிஸ்தானை தனிமைப் படுத்துவதற்கான காரணமாக அமைகிறது என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அண்மையில், மசூத் அசார் சகோதரர் உட்பட, ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பின் 44 தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் தடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த தடுத்து வைப்பு எவ்வாறு கையாளப்படப் போகிறது என தெளிவாகப் புலப்படவில்லை என அவர் கூறினார்.

கூடிய விரைவில் மசூத் அசார் மீதான நடவடிக்கை தொடங்கப்படும் என நம்பிக்கை தெரிவித்த பெரா, அவ்வாறு செயல்பட தவறினால் பாகிஸ்தான் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.